் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தற்போது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் அதாவது பி.லிட்.,யில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி-இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், உயிரி-வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், நிலவியல்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெரிட் முறையிலும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வரைவோலை எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப ரூ.850 வரைவோலை எடுக்க வேண்டும். சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜன.,24ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது. பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.,25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 3ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment