பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 18 வரை நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான அட்டவணையை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான மாணவர்களின் பதிவு எண் பட்டியல் ஜனவரி 27-ஆம் தேதி வாக்கில் தயாராகும் எனத் தெரிகிறது. சிறிய மாவட்டங்களில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்திலேயே நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும், பெரிய மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 18 வரை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். பொதுத்தேர்வுக்குப் போதிய இடைவெளி வழங்கும் வகையில் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment