இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 03, 2013

மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை: விலை ரூ.70 முதல் ரூ.100 வரை

  மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகங்கள் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும். பாடநூல்களுக்கான தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி போக, மீதமுள்ளத் தொகையை பள்ளி முதல்வர்கள் அந்தந்த வட்டார அலுவலகங்களில் வரைவோலையாகச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவம் ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் பருவ புத்தக விநியோகம் தொடர்பாக டாக்டர் கே.கோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூன்றாவது பருவத்துக்கு மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் 1.40 கோடி இலவசப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 77 லட்சம் புத்தகங்கள் 22 வட்டார மையங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 1, 2 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.70-க்கும், 3, 4, 5, 6 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்படும். 7, 8 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.100-க்கும் விற்கப்படும். வட்டார மையங்களில் பள்ளிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புத்தகங்களுக்கான விலையை மொத்தமாக வரைவோலையாகச் செலுத்தி பள்ளி முதல்வர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வசதியாக எடுத்துச் செல்லும் வகையிலும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment