பயணிகள் ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர்,10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ரயில் கட்டணம் உயர்tத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சரக்கு ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறிய அவர், இந்த கட்டண உயர்வின் மூலம் 12,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட முடிவு செய்யப்ப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கட்டண உயர்வு விவரம் தூங்கும் வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 6 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.சாதாரண வெளியூர் ரயில்களுக்கு கி.மீ.க்கு 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.நகர்ப்புற ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 ஆம் வகுப்பு கட்டணம் கி.மீ.க்கு 4 காசும்,ஏ.சி.3 டயர், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
21 ஆம் தேதி முதல் அமல் இந்த கட்டண உயர்வு வருகிற 21 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலாவதாக அவர் மேலும் கூறினார். கட்டண உயர்வு ஏன்? மேலும் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு ஏதும் இருக்காது என்று தெரிவித்த அவர், 6 ஆவது ஊதிய கமிஷன் செலவினம், ரயில்வே பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment