தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment