தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம் ,அந்தந்த மாவட்ட தலைநகரத்தில் ,இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சமீபத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளனர். இவர்களுக்கு, அந்தந்த மாவட்ட தலைநகரில் இன்றும், நாளையும் பயிற்சி முகாம் நடக்கிறது.
இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தொடங்கி வைக்கின்றனர். தலைமை ஆசிரியர்கள் கருத்தாளுனராக இருப்பர். இதில் அரசு திட்டத்தை விளக்குதல், பள்ளியில் ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் 14 வகை இலவச திட்டம், ஸ்மார்ட் கார்டு திட்டம், முதல்வரின் விஷன் முன்னோடி திட்டம், தரமான கல்வி, சுற்றுப்புற தூய்மை, மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், தேசிய குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இதை அந்தந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment