தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் மையங்களுக்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் 3,200 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மன்றத்துக்கு ரூ.2,500 வீதம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீர், மண், காற்று ஆகியவற்றினை பாதிக்கக் கூடிய சூழல் விவரங்களை அறிந்து கொள்வதற்காக, தமிழகத்திலுள்ள ஆயிரம் பள்ளிகளுக்கு நீர், மண் ஆய்வக பரிசோதனை உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு காற்று ஆய்வு உபகரணமும் வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இயற்கைச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம், வன உயிரின தடய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், தாவரங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான கள ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவனம் ரூ.27.13 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இந்த நிறுவனத்தில் பணியாற்ற 8 பணியிடங்களை உருவாக்கவும், இந்தத் திட்டத்தால் அரசுக்கு ரூ.26.99 லட்சம் தொடர் செலவினம் ஏற்படும்.
No comments:
Post a Comment