வனத்துறையில் காலியாக உள்ள சார் நிலை பணிகளை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி 2006 முதல் 2009ம் ஆண்டு வரை குரூப்&4 தேர்வு நடத்தியது. இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
டிஎன்பிஎஸ்சி நடத்திய வனத்துறை சார் நிலை பணித்தேர்வு முறையாக நடைபெறவில்லை. எனவே, 2006 முதல் 2009ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட வனத்துறை சார் நிலை பணித்தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி இறுதி பட்டியல் வெளியிடும்போதுதான் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், நேர்காணலின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தக்கூடாது.தமிழ் வரூ. கல்வி பயின்றவர்களுக்கு சிறப்பு ஒதுக் கீடு வழங்கும்போது, அந்த ஒதுக்கீடு பெற தகுதியானவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு அடுத்த தகுதியுடைய நபருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழ் வரூ. கல்வி பயின்றவர்களுக்கு நேரடி நியமனத்தில் 20 சதவீதம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணை குறித்து அரசிடம் டிஎன்பிஎஸ்சி விளக்கம் பெற்று, அதன் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.தியாகிகள், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தேவையில்லை. எம்எஸ்சி அப்ளைடு பயாலஜி, வனவியல் பட்டத்திற்கு சமமானதா என்பதை அரசிடம் டிஎன்பிஎஸ்சி விளக்கம் பெற வேண்டும். இரு படிப்புகளும் சமமானதாக இருந்தால், தகுதியான சான்றிதழ் வழங்க வேண்டும். வனவியல் பட்டதாரிகள், வனவியல் பட்டத்திற்கு சமமான பட்டம் பெற்றவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல், இறுதித் தேர்வு நடத்தி காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகும் காலியிடம் இருந்தால், அதில் வனவியல் தொடர்புடைய பட்டம் பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment