வாக்காளர் விழிப்புணர்வு தினங்களில், ஓட்டுச்சாவடிகளில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த ,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜன., 25 ல் வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாக்காளர் விழிப்புணர்வு தினங்களில்,புதிய வாக்காளர்களாக சேர்க்கப் பட்டவர்களுக்கு ,அடையாள அட்டை வழங்க,தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்திட வேண்டும். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, புதிய வாசகங்களை உருவாக்கும் போட்டிகளும் நடத்திட வேண்டும்.
இதற்காக,சிறந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்க வேண்டும் என ,தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதன்படி போட்டி நடத்த உதவ ,முதன்மை கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவனங்களை தேர்தல் அதிகாரிகள் கேட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment