: வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நேற்று வரை, 9.2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கு, கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. இதற்கான கடைசி நாளான இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடியும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, 9.20 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காலியாக உள்ள பணியிடங்கள் 1,045.இன்று, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர்; இதனால், மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, தேர்வாணையம் எதிர்பார்க்கிறது. இணையதளத்தில் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தை செலுத்தாதவர்கள் மட்டும், 14ம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.நகராட்சி ஆணையர், சார் - பதிவாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப்௨ தேர்வு, 12ம் தேதி காலை, 10 மணி முதல், பிற்பகல், 1 மணி வரை, 114 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை, 6.4 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தேர்வர்களுக்கான, "ஹால் டிக்கெட்&' ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இன்றைக்குள், "ஹால் டிக்கெட்&' எடுக்க முடியாத தேர்வர், தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான உரிய ஆதாரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காட்டி, "ஹால் டிக்கெட்&' பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களாக இருந்தால், தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என, தேர்வாணையம் நேற்று அறிவித்த
No comments:
Post a Comment