‘நூலகத்துறையில் பி.எட்., முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கவேண்டும்,” என நூலகத்துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலத்தில் 4,128 நூலகங்களில், 2,532 பேர் பணிபுரிகின்றனர். இது தவிர மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர். மாவட்ட அளவில் சீனியர் நூலகர்களே மாவட்ட அலுவலராக பணியாற்றுகின்றனர். இத்துறையில், காலியாக உள்ள இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்களுக்கு நூலகத்துறையில் உள்ளவர்களை பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்காமல், கல்வித்துறையில் உள்ளவர்களை நியமிக்கின்றனர். கல்வித்துறையினர் போன்று சலுகைகள் கிடைக்காமல், நூலகத்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில், 1,762 கிளை நூலகங்களில் தலா ஒருவர் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது. ஊர்புற நூலக ஊழியர்களுக்கும், கிளை நூலகர் பணிகள் தரப்படுகின்றன. ஆனால் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது. கவுன்சிலிங் மூலம் அருகில் உள்ள நூலகங்களுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும். அரசு நூலக துறை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் செல்வம் கூறுகையில், கல்வி துறையின் கீழ் செயல்படுகிறோம். ஆனால் அரசு பள்ளிகளில் நூலகர் பணியிடம் நிரப்பும்போது, எங்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. இத்துறையில் பி.எட்., முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும், என்றார். ்
Monday, August 20, 2012
பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment