இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சீன மொழியான மண்டேரின் கற்றுத்தர இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் எதிரொலியாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் விரைவில் மண்டேரின் ஒரு பாடமாக சேர்க்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியத் தூதர் ஜெய்ஷங்கர் மற்றும் சீன உயரதிகாரி சூ-லின் இடையே பீஜிங்கில் நேற்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, மண்டேரின் மொழியைக் கற்றுத் தருவதற்காக இந்திய ஆசிரியர்களுக்குத் தேவையான உதவிகளையும், பாடத் திட்டத்தையும் சீனா அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணவு ஒப்பந்தத்தின் படி, இந்தியாவைச் சேர்ந்த 300 ஆசிரியர்களுக்கு சீன அரசு மண்டேரின் மொழியை சொல்லித் தரும். இதற்கான செலவையும் அந்நாட்டு அரசே ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவில் இருந்து சீனா செல்லும் ஆசிரியர்களுக்கு, உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து செலவு உள்ளிட்டைவையும் இவற்றில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வை அதிகரிக்கவும், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என இந்தியத் தூதர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Friday, August 24, 2012
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மன்டேரின் கற்றுத்தர ஒப்பந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment