இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 20, 2012

பணிப்பதிவேட்டில் பிறந்த தேதி மாற்றப்பட்டு இருந்தாலும், அரசு ஊழியருக்கு உண்மையான பிறந்த தேதியின் அடிப்படையில் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் டி டு

பணிப்பதிவேட்டில் பிறந்த தேதி மாற்றப்பட்டு இருந்தாலும், அரசு ஊழியருக்கு உண்மையான பிறந்த தேதியின் அடிப்படையில் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   நாகை மாவட்டம் மயிலாடுதுறை செம்பரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் அலுவலராக பணியாற்றியவர் டி.வி.அன்பழகன். 31.12.1946 அன்று பிறந்த அவர், 19.9.75 அன்று அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 31.7.2000 அன்று அவருக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது. 31.12.46 அன்று பிறந்திருந்ததால், அன்பழகனுக்கு 31.12.04 அன்று பணிஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.   எனவே இதுகுறித்து அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். வங்கி கடன் பெறுவது தொடர்பாக தனது சம்பள சான்றிதழை வாங்கியதாகவும், அதைப் பார்த்தபோதுதான் தனது பிறந்தநாள் தவறாக 4.7.1942 என்று பணிப்பதிவேட்டில் மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்ததாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கப்படாமல் கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.   அந்த உத்தரவை எதிர்த்து அன்பழகன் மயிலாடுதுறை கூடுதல் சப்-கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு அன்பழகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அன்பழகனின் வழக்கை தள்ளுபடி செய்து கீழ்க்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவும் தள்ளுபடி செய்யப்பட்டது.   இந்த உத்தரவை எதிர்த்து நாகை மாவட்ட கலெக்டர், செம்பரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-   அன்பழகன் 16.4.01 அன்று சிவில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது பிறந்த தேதியை பணிப்பதிவேட்டில் மாற்றியிருப்பது சட்ட விரோதம் என்றும், உண்மையான பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.   ஆனால் இதற்கு கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் அன்பழகன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பணிப்பதிவேட்டில் அவரது பிறந்தநாளை 4.7.42 என்று பதிவு செய்தோம். ஓய்வு பெறும்போது, இப்படி வழக்கு தாக்கல் செய்வது தற்போது அரசு ஊழியர்களிடையே வழக்கமாக உள்ளது. பிறந்தநாள் மாற்றம் குறித்த கோரிக்கைகளை, பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் கொடுத்திருக்க வேண்டும்.   தனது பிறந்த தேதியை யாரோ திருத்திவிட்டார்கள் என்று அன்பழகன் கூறுவது தவறு. எனவே அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.   இந்த கலெக்டர் மற்றும் கமிஷனர் தாக்கல் செய்துள்ள இந்த 2-வது அப்பீல் வழக்கைப் பொறுத்தவரை, அன்பழகன் கூறிய தேதியைத்தான் பணி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது வயதை உயர்த்தி பதிவு செய்வதற்கு அவருக்கு எந்த நிர்ப்பந்தமும் இருந்ததாக தெரியவில்லை.   வயதை அதிகரித்து பதிவு செய்தால், சீக்கிரமாக ஓய்வு பெற வேண்டியது இருக்கும். இதைத் தெரிந்த அறிவுள்ள எவராவது அப்படி வயதை கூட்டி பதிவு செய்வார்களா? எனவே கலெக்டர், கமிஷனர் கூறும் இந்த கருத்தை ஏற்க முடியாது.   பிறந்த தேதியை திருத்த வேண்டும் என்று அன்பழகன் கோரவில்லை. அதுபோன்ற கோரிக்கையைத்தான் தமிழ்நாடு பணிகள் விதிகளின்படி, பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் வைக்க வேண்டும். அன்பழகனின் கோரிக்கை அதுவல்ல. இடையில் செய்யப்பட்ட தவறை மாற்றி, ஏற்கனவே பதிவு செய்த சரியான பிறந்த தேதியை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் அன்பழகனின் கோரிக்கை.   அன்பழகன் தாக்கல் செய்திருந்த பிறந்தநாள் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், தமிழ்நாடு அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் கொடுத்த உறுப்பினர் சான்றிதழ் ஆகியவற்றின் படி அவரது பிறந்த தேதி 31.12.46 தான். இதுதான் பின்னர் பணிப்பதிவேட்டில் 4.7.42 என்று மாற்றப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது. எனவே தேதி மாற்றம் குறித்து நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை.   அனைத்து ஆவணங்களும் கலெக்டர், கமிஷனரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் பிறந்த தேதியை யார், எதற்கு மாற்றினார்கள் என்பதை அவர்கள்தான் கண்டறிய வேண்டும். இதற்கு அன்பழகன் பொறுப்பல்ல. ஆனால் அன்பழகனின் பிறந்த தேதி மாற்றப்படவில்லை என்று கலெக்டர், கமிஷனர் நிரூபிக்கவில்லை.   எனவே அவர்களின் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2003-ம் ஆண்டு கூடுதல் சப்-கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சிறிது மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பணி பதிவேட்டில் 4.7.42 என்று மாற்றப்பட்ட பிறந்த தேதியை நீக்கிவிட்டு 31.12.46 என்று பதிய வேண்டும். உண்மையான பிறந்த தேதியின்படி வரும் ஓய்வுநாள் வரையிலான பணபலன்களை அன்பழகனுக்கு கலெக்டர், கமிஷனர் வழங்க வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment