மத்திய அரசின் வங்கி சீர்திருத்த சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளையும் நாளை மறுநாளும் (ஆக.22.,23) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஐக்கிய வங்கி பணியாளர் சங்கங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
வங்கி சீர்திருத்தம் தொடர்பான வேலைகளில், மத்திய அரசு ஈடுபடத் தொடங்கியதில் இருந்தே, அதன் பல்வேறு முயற்சிகளுக்கு வங்கிப் பணியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில், இவர்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளையும் நாளை மறுநாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இந்த சங்கத்தின் கோரிக்கை பட்டியல் நீளமானது.
அதில், வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியாருக்கு வழங்கக் கூடாது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் கிராமப்புற வங்கிக் கிளைகளை மூடிவிடும் அரசின் கொள்கையை கைவிட வேண்டும். வங்கிப் பணியாளர் தொடர்பான கந்தேல்வால் கமிட்டி பரிந்துரையை தன்னிச்சையாக முடிவெடுத்து அமலாக்க கூடாது என்பனவும் அடங்கும்.
Tuesday, August 21, 2012
நாளையும் நாளை மறுநாளும் வங்கி வேலைநிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment