மதுரையில் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவில் பள்ளிகளின் தகவல் தொகுப்புகள் சேகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவின்படி மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அரசு நலத்திட்டங்களால் பயனடைந்த மாணவர்கள், அரசு திட்டங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இலங்கை அகதிகள், மொழி, இனம், ஜாதி அடிப்படையில் கல்வி உதவி தொகை பெறும் மாணவர்கள் விவரங்கள், மாவட்டங்கள் வாரியாக தொகுக்கப்பட்டன. சி.இ.ஓ., நாகராஜமுருகன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த ஒட்டுமொத்த விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள், பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும். இதன் மூலம் கல்வி துறையில் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் எளிதாகும். மாவட்டங்கள் வாரியாக இந்த விவரங்கள் இணையதளத்திலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.
No comments:
Post a Comment