ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். மக்களை காண வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும், ஆணவம் அகன்று, சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தை ஓணம் பண்டிகை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து
திமுக. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"தமிழ்ச் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லமல், தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்கள் வாழ்விலும் எப்போதும் உரிய கவனம் செலுத்தி வரும் திமுக சார்பில், மலையாள மக்கள் அனைவர் வாழ்விலும் என்றும் வளம் குவிய, நலம் பொலிய இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்"என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment