இந்த மாதத்தில் இரண்டாவது முழு நிலவை இன்று காணலாம். இதுதொடர்பாக, டில்லியில் உள்ள இந்திய கோளரங்க சங்கத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியதாவது:இந்த மாதத்தில், முதன்முதலாக, 1ம் தேதி பவுர்ணமி வந்தது. மீண்டும் இன்று பவுர்ணமி வந்துள்ளது. இன்று இரவு, 7:28 மணிக்கு முழு நிலவை காணலாம். ஒரு மாதத்தில், இரு முறை பவுர்ணமி வருவது அரிதானது.
அப்படி இரண்டாவது முறையாக தோன்றும் முழு நிலவு, "புளூ மூன்' என, அழைக்கப்படுகிறது.அடுத்த, புளூ மூன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஜூலை, 31ல் தோன்றும். சந்திரன் ஒரு முறை பூமியைச் சுற்றி வர, 27 நாட்களுக்கு மேலாகிறது. அதனால், மாதம் ஒரு முறை பவுர்ணமி வரும். ஆனால், "புளூ மூன்' என்பது, சராசரியாக, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். இன்று மாலை, 6:13 மணிக்கு, நிலவு உதயமாகும். இரவு, 7:28 மணிக்கு முழுமையான அளவில் தோன்றும். கடந்த முறை, 2009 டிசம்பரில், "புளூ மூன்' தோன்றியது எனக் கூறினார்.
No comments:
Post a Comment