எஸ்.சி குரூப்-2: கோவையில் 52.4% பேர் ஆப்சென்ட்-05-08-2012 எழுத்தின் அளவு : Print Email கோவை: கோவையில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 820 பேரில் 2 ஆயிரத்து 296 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 138 பதவிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு நிலை௨), எழுத்து தேர்வு, கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 மையங்களில் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் 47.6% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள (2,524 பேர்) 52.4% பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 138 பதவிகளுக்காக நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு, 66 ஆயிரம் பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் அமைதியாக தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பணி நியமனம் உண்மையான தகுதி அடிப்படையில் நடக்கும் என்றார்.
No comments:
Post a Comment