2ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை: 49,000 இடங்கள் காலி-10-08-2012 காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இதில், 49 ஆயிரத்து 664 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்களுக்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஜூலை 18ம் தேதி துவங்கியது. 27 நாட்கள் நடந்த கவுன்சிலிங் நேற்று முடிவடைந்தது. இந்தக் கலந்தாய்விற்கு மொத்தம் 28,350 விண்ணப்பங்கள் வந்தன. 28,102 விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 21,123 ஆண்கள், 3290 பெண்கள் என 24,413 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டன. சிவில் 4,456, மெக்கானிக்கல் 6,907, எலக்ட்ரிக்கல், 12,567, கெமிக்கல் 191, டெக்ஸ்டைல் 207, பி.எஸ்.சி., 77, லெதர் 4, பிரிண்டிங் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மொத்த கல்லூரிகள் மூலம் 74,077 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. கவுன்சிலிங் முடிந்த நிலையில் இடஒதுக்கீடு போக, 49,664 இடங்கள் காலியாக உள்ளன. இத்தகவலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளரும், அழகப்பா இன்ஜி., கல்லூரி முதல்வருமான மாலா தெரிவித்தா
No comments:
Post a Comment