்
மதுரை காமராஜ் பல்கலையில் "கிளர்க்குகள்&' பணி நியமனங்கள் குறித்து விசாரிக்கும் சம்பத் கமிட்டி, தனது அறிக்கையை ஆக.,31க்குள் தாக்கல் செய்கிறது. இப்பல்கலையில், 2005ல், அனைத்து துறைகளுக்கும் 49 இடங்களுக்கு கிளர்க்குகள் பணிநியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்காக நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. தொகுப்பூதியம் அடிப்படையில் பல்கலையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்ற தகுதி வரையறுக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றியவர்கள், பேராசிரியர்கள் சிலர் மூலம் "போலி&' சான்றிதழ்கள் பெற்று, தேர்வு எழுதி, பணியில் சேர்ந்ததாகவும், தகுதி உள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை விசாரிக்க, 2008ல், துணைவேந்தராக கற்பககுமாரவேல் இருந்தபோது, சம்பத் கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையை துரிதப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சம்பத் கமிட்டி ஆர்வம் காட்டியும், அப்போது நிர்வாகத்தில் இருந்தவர்கள் கமிட்டியின் அறிக்கையை கேட்டுப்பெறுவதில் அக்கறை காட்டவில்லை என்று சர்ச்சை எழுந்தது. சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர், இக்கமிட்டியின் அறிக்கையை தாமதப்படுத்த காய் நகர்த்தியதாகவும் பல்கலை வட்டாரத்தில் தகவல் பரவியது. பின், துணைவேந்தராக கல்யாணி பொறுப்பேற்றவுடன் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், கவர்னர் பரிந்துரைபடி, செல்வக்குமார், முரளி மற்றும் துணைவேந்தர் பரிந்துரைபடி, சாரதாம்பாளும் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஆக., 21ல், பல்கலையில் சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு முன், சம்பத் கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், சம்பத் கமிட்டியின் அறிக்கை இம்மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.
Monday, August 13, 2012
ஆகஸ்ட் 31க்குள் சம்பத் கமிட்டி அறிக்கை தாக்கல
Labels:
tnptfmani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment