தமிழகத்தில் பள்ளிகளின் பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக துணை மின் நிலையத்தில் இருந்து பீடர் என்ற வழித்தடம், டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மின் விநியோக பெட்டி உள்ளிட்டவை வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அதிக வெப்பத்துடன் இருக்கும்.
இதனால் அந்த சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த பணிகள் நடக்கும் இடங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதால் மின் சாதனங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பிப்ரவரி மாத இறுதியில் இருந்து மின் வாரியம் தடை விதித்தது.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:
தேர்வு நேரங்களில் மின் சாதனங்கள் பராமரிப்புக்காக மின் தடை செய்தால், மாணவர்கள் படிக்க சிரமப்படுவர் என்பதால், இரு மாதங்கள், மின் சாதனங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அவசியம் இருந்த சில பகுதிகளில் மட்டும் உயரதிகாரிகள் ஒப்புதலுடன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், வழக்கம்போல் மீண்டும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் அனுமதித்துள்ளது. இதனால் பராமரிப்பு நடைபெறும் பகுதிகளில் பகல் வேளையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும் கடும் வெயிலால் மின் தேவை அதிகரித்து வருவதால் பல இடங்களில் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஓரிரு தினங்களில் துணை மின் நிலையம் மற்றும் மின் சாதனங்களில் மீண்டும் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மின் தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய வழியில் மின் கட்டண வசதி ரத்து: தமிழகத்தில் மின் கட்டணத்தை, மின்சார வாரிய கட்டண மையங்கள், இணையதளம், செல்லிடப்பேசி செயலி (செல்போன் ஆப்) வாயிலாகவும், அரசு இ - சேவை மையங்கள், தபால் நிலையங்களில் மூலமாகவும் செலுத்தலாம்.
No comments:
Post a Comment