நாளை முதல் அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் ஏடிஎம்களில் பணத்தை முன்னதாகவே எடுத்து கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. 28-ம் தேதி இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள்.
அதனை தொடர்ந்து 30-ம் தேதி புத்த பூர்ணிமாவும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினமும் வருவதால் அதனை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நான்கு நாட்களிலும் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.
அத்துடன், விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஏடிஎம்களில் மக்கள் முன்கூட்டியே பணத்தினை தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளுமாறும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment