இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 19, 2018

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது


தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இன்று (20ம் தேதி) நிறைவுபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதினர்.

இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளது. இதற்காக கல்வி மாவட்டத்திற்கு ஒன்று வீதம் விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். விடைகள் தொடர்பான பட்டியல் வரும் 23ம் தேதி விநியோகம் செய்யப்படுகிறது.

ஏப்ரல் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர். ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 26ம் தேதி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர்.

ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவியல், சமூக அறிவியல் விடைத்தாள் திருத்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment