பள்ளிகள் திறந்த பின் ஜூன் மாதம் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்.
தற்போது, 'ஆன்லைன்' மூலம் கவுன்சிலிங் நடப்பதால், முறைகேடு தவிர்க்கப்பட்டு, கல்வித்துறையின் பணி எளிதாகிறது. இருப்பினும், கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முன் தயாராக ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்.ஆனால், நடப்பாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், மே மாதம், 2வது வாரம் வரை ஆசிரியர்களுக்கு சரியாக இருக்கும்.
தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்புக்கான பணி இருப்பதால், மீதமுள்ள நாட்களில் கவுன்சிலிங் நடத்தி முடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மே, 20ம் தேதிக்கு பின்னரும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஜூன் முதல் வாரமும் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்
No comments:
Post a Comment