பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பின், மாணவர் கள் உடனடியாக உயர் கல்விக்குச் செல்ல வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாட்டி லேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
ஆலோசனை கூட்டம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடக்க உள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், தேர்வு ஏற்பாடு குறித்து, நேற்று, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் மற்றும் துறை இயக்குனர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். பின், முதன்மை செயலர் சபிதா அளித்த பேட்டி: பொதுத்தேர்வு ஏற்பாடு கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்வு மையம், தேர்வு அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துனர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
பொதுத்தேர்வு முடிவு கள் வெளியானதும், 10 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான ஏற்பாடுகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில், முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். மாணவர்கள், ஆன்-லைனில் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழ் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து, 90 நாட்கள் செல்லத்தக்கது.
தேர்வு முடிவுகள் வெளியான பின், 10 நாட்களில், அசல் சான்றிதழை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். பொதுவாக, பல்கலைக் கழகங்களில் கல்லூரிப் படிப்புகளுக்கு மட்டும், தேர்வு முடிவுகள் வந்ததும், 'புரொபஷனல் சர்ட்டிபிகேட்' என்ற, தற்காலிக சான்றி தழ் வழங்கப்படும். பின், பட்டமளிப்பு விழா நடத்தி, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், முதன்முறையாக தமிழகத்தில் தான் பள்ளிப் படிப்புகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகமாகிறது.
ஒரு மாதத்திற்குள்...: சி.பி.எஸ்.இ., பள்ளி களில், மதிப்பெண் பட்டியல் நகல் மட்டும் உடனே கிடைக்கும். தேர்வு முடிவு வெளியான ஒரு மாதத்துக்குள், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மதிப்பெண் நகலையே உயர் கல்விக்கு முதற்கட்ட சான்றிதழாக எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment