பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுத் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்கள் தேர்வு சமயத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை, தேர்வுக்காக உடல்நலத்தை தயார் செய்தல் குறித்த ஆலோசனைகள், தேர்வு பயம், ஞாபக மறதி, தைரியமாக தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
தேர்வு சமயத்தில் பெற்றோர் மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிறருடன் ஒப்பிட்டு பேசாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவையில் மனநல மருத்துவரும் இரண்டு ஆலோசகர்களும் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment