நன்றி திரு ஞானகுரு
தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர்
01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு.
உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.T.Ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர்மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் SC,MBC பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும்பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment