தமிழகத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்க, இடை நிலை கல்வித்திட்டத்தின் கீழ், 202 சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளி கல்வித்துறையில், புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சில குறிப்பிட்ட வகுப்புகள், சிறப்பாசிரியர் மூலம், தனியாக நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு அக்., 17ம் தேதி, சட்டசபையில் பள்ளிகல்வி மானிய கோரிக்கையில்,' இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 5.35 கோடி ரூபாயில், 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும்' என, அமைச்சர் வீரமணி அறிவித்தார்.இதையடுத்து, தமிழக பள்ளிகளில், 2,178 மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கற்பிக்க, 202 சிறப்பாசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இப்பணியிடங்கள், டி.ஆர்.பி.,யால், போட்டி தேர்வு வாயிலாக, நிரப்பவும், அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment