பிரணாப் முகர்ஜி உரை
கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஏழைகள் ஒதுக்கப்பட்டோருக்காக பாடுபடுவதே தமது நோக்கம் மேலும் நிதித் தீண்டாமையை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது எனவும் தொவித்துள்ளார். அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற ஜன்தன் திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது.
வளர்ச்சித் திட்டத்தின் பயன்கள் கடைசி பயனாளிக்கும் சென்று சேர அரசு உறுதியளித்துள்ளது. நேரடி மானியப் பணம் பட்டுவாடா திட்டம் 35 இனங்களுக்கு விரிவாக்கம் மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீட்டுவசதியை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது மேலும் வீட்டுவசதித் தறையில் நேரடி அந்நிய முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறு, நடுத்தர விவசாயிகளை இலக்காகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விளைபொருளுக்கு கட்டுப்படியான விலையை அரசு உறுதி செய்யும் எனவும் முகர்ஜி தெரிவித்துள்ளார். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் மேலும் மாணவர்கள் கல்வித்தொகை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நாடோடிகளாக உள்ள பழங்குடி மக்களுக்கு விடுதியில் கட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும் மாளவியா என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் கவுரவத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மேலும் பெண்களுக்கு என மருத்துவ உதவி மற்றும் தங்கும் இட வசதி, சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்புத் திட்டத்தை அரசு அமல்படுத்தப்படுகிறது மேலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொழிற்பழகுநர்களுக்கு மேம்பட்ட பயிற்சி வழங்க அரசு திட்டம் வகுத்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் தொழில்களை பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நீதித்துறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. காலாவதியான தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் 1,741 சட்டங்கள் தேவையற்றவை என கண்டறியப்பட்டு, நீக்க என பிரணாப் உரையில் தெரிவித்துள்ளார்.
கிராமங்கள் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. பழைய திட்டக்கமிஷனுக்குப் பதில் நிதி ஆயோக் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுடன் வடிய கூட்டாட்சிக்கு நிதி ஆயோக் வழிவகுக்கும் மேலும் சேவை வரியை அமல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்த சரக்கு மற்றும் சேவை வரி முறை உதவும் என குடியரசுத் தலைவர் உரையில் கூறியுள்ளார். நிதிச் சட்ட சீர்திருத்த கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. சிக்கலின்றி தொ-ழில்களை நடத்த சட்ட விதிகள் எளிமைப்படுத்தப்படும். தொழில்களுக்கான அனுமதி பெற ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment