தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கூடுதல் தொழிலாளர்களை கொண்டு வரும் வகையிலும், தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பண பலன்கள் அளிக்க வகை செய்யவும், வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பார்லிமென்டில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் துறைகளில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தில், 12 சதவீதத்தை, தங்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்காக வழங்குகின்றனர். அது போல, அந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களும், 12 சதவீதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்குகின்றன. நிறுவனங்கள் வழங்கும், 12 சதவீத நிதியில், 8.33 சதவீதம், புதிய பென்ஷன் திட்டத்திற்காகவும், மீதமுள்ள, 3.67 சதவீத நிதி வைப்பு நிதிக்கும் வழங்கப்படுகிறது.
தொழிலாளர் பணியிலிருந்து ஓய்வுபெறும் போது, அவர் சேர்த்த வைப்பு நிதி, அவருக்கு வழங்கப்படுகிறது.இந்த உன்னத திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், முந்தைய சட்ட திட்டங்களுடன் செயல்பட்டு வந்தது.கடந்த ஆண்டு மே மாதம், பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், தொழிலாளர் நலச் சட்டங்கள் பல மாற்றியமைக்கப்பட்டன; அப்போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டன.
அதில், முக்கியமான திருத்தங்களாவன:
* ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தொழிலாளர் மாறினாலும், அவரின் வருங்கால வைப்பு நிதியை ரத்து செய்யாமல், கணக்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.பி.எப்., போர்ட்டபிலிட்டி என்ற இந்த முறையில், 'யுனிவர்சன் அக்கவுன்ட் நம்பர்' என்ற, யு.ஏ.என்., வழங்கப்படும். அந்த தொழிலாளி, எந்த நிறுவனத்திற்கு மாறினாலும் அவரின் கணக்கில் நிதி சேர்க்கப்படும்.இவ்வாறு, நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* நம்பர் போர்ட்டபிலிட்டி திட்டப்படி, சந்தாதாரரான தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு, அந்த கணக்குடன், தொழிலாளர்களின், யு.ஏ.என்., சேர்க்கப்பட உள்ளது.
* சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சம், 6,500 ரூபாய் மாத சம்பளம் பெறுபவர்கள் மட்டும் தான், பி.எப்., திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டும். அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என இருந்ததை, 15,000 ரூபாய் என மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு.இதனால், கூடுதலாக, 50 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
* தொழிலாளர் இறந்தால், அவர் குடும்பத்திற்கு மிகக் குறைவான தொகையே பென்ஷனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், குறைந்தபட்ச பென்ஷன் தொகை, 1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 28 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
* தொழிலாளர் டிபாசிட்டுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டத்தில், 1.56 லட்ச ரூபாயாக இருந்த காப்பீடு தொகை, 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வருங்கால வைப்பு நிதியிலிருந்து, ஐந்தாண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால் வரி விதிக்கப்பட்டிருந்தது; மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னமும், பல சீர்திருத்தங்களுக்கு மசோதா தயாராகி வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருகிறது மாற்றங்கள் :
மத்திய, வருங்கால வைப்பு நிதியத்தின் கூடுதல் கமிஷனர் ராஜேஷ் பன்சால் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, மசோதா தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது. இதன் மூலம், கூடுதல் தொழிலாளர்களுக்கு நன்மை, கூடுதல் தொழிலாளர்களை, வருங்கால வைப்பு நிதி வளையத்திற்குள் கொண்டு வருவது போன்றவை சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்?
* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம், 20 பேர் பணியாற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது. அது, 10 ஆக குறைக்கப்பட உள்ளது.இதன் மூலம், சிறிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வரம்புக்குள் வருவர். அவர்களுக்கு, சமூக, பணி பாதுகாப்பு கிடைக்கும்.
* சம்பளத்தில் மாதம் தோறும், 12 சதவீதத்தை கட்டாயம் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என இருப்பதை, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக தளர்த்துவது என்பது மத்திய அரசின் விருப்பமாக உள்ளது.குறைந்த சம்பளம் பெறுபவர்கள், தங்கள் விருப்பப்படி, வருங்கால வைப்பு நிதிக்கு பணத்தை சேர்க்கலாம் என, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது.
அடேங்கப்பா....!தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், ஐந்து கோடி சந்தாதாரர்கள் அல்லது உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும்,
No comments:
Post a Comment