இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பாகும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி வரை விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி ஆகும். இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், ஒளிவுமறைவின்றி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3–வது கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ள இந்த தேர்வில், தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் வண்ணம் ‘‘ஆப்டிடியூட்’’ எனப்படும் திறனறிவுத்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் கால் இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும்.
தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணையதளம் குரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம். வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment