மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, நவ., 17ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, தற்போது, 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனரின் அறிவிப்பு: மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பாடங்களில் இருந்து, கேள்விகள் அமைக்கப்படும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் இருந்து, கேள்விகள் இடம்பெறும். மூன்று பகுதிகளாக, தேர்வுகள் நடக்கும். இதில், தகுதி வாய்ந்த, 256 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதம், 500 ரூபாய் வழங்கப்படும். மாணவ, மாணவியர், தங்கள் பள்ளிகள் மூலமாகவே, இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகள், தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து, வரும், 4ம் தேதியில் இருந்து, 16ம் தேதி வரை, தேவையான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டணமாக, மாணவர்கள், 50 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாணவர்களிடம் இருந்து, வரும், 16ம் தேதியில் இருந்து, பள்ளி நிர்வாகங்கள் பெற்று, அதன் விவரங்களை, வரும், 16ம் தேதியில் இருந்து, 21ம் தேதிக்குள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவு செய்ய வேண்டும். பின், அந்த விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணங்களையும் மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். 23ம் தேதி மாலை, 5:30 மணி வரை, விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment