- தமிழகத்தில் 1-1-2014 நாளை தகுதி நாளாக கொண்டு, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 1-10-2013 அன்று வெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 1-10-2013 முதல் 31-10-2013 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். 2-10-2013 மற்றும் 5-10-2013 ஆகிய நாட்களில் அனைத்து கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.
6-10-2013, 20-10-2013 மற்றும் 27-10-2013 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படுகின்றன. அதன்பின்னர் 6-1-2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 1-1-2014 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என்றும், அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு பூத் அலுவலர்களுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜெண்ட்கள் நியமிக்கப்பட்டதும், அவர்கள் பெயர் தேர்தல் ஆணைய அலுவலக இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment