தனியார் பள்ளிகளில் ஆரம்பநிலை வகுப்புகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆரம்பநிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் நலிவுற்ற பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை மீண்டும் அறிவுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: இந்த 25 சதவீத இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மே 11-ஆம் தேதியன்று தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மே 14-ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். அன்றைய தினம் மாலை 2 மணியளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment