மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற பகுதிகளில் பணியாற்றும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 2011- 2012 ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரத்தை கணக்கெடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெயர், படிக்கும் வகுப்பு, அவர்களின் பெற்றோர், தொழில், வழங்கப்பட்ட உதவித்தொகை விவரம், உதவித்தொகை பெற்றதற்கான ஒப்புகை சீட்டு உட்பட அனைத்து விவரங்களும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ்
Saturday, August 18, 2012
கல்வி உதவித்தொகை விவரங்கள் கணக்கெடுக்கும் பணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment