்
பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் முடிவுகள், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியரின் பழைய மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் சான்றிதழ், 17, 18 (இன்றும், நாளையும்) ஆகிய தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் உள்ள மாநாட்டுக் கூடடத்தில் வழங்கப்படும். "மதிப்பெண் மாற்றம் உள்ளது&' என்ற தகவலைப் பெற்ற மாணவ, மாணவியர், தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நேரில் ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உடனடி தேர்வுமுடிவு வெளியீடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த, ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர், ஜூன், ஜூலையில் நடந்த உடனடித்தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், இன்று மாலை(ஆகஸ்ட் 17) 4 மணிக்கு, தேர்வுத்துறை இணைய தளத்தில் www.dge.tn.nic.in வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார். மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழை, 29, 30 ஆகிய தேதிகளில், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும், மறுகூட்டலுக்கான தேதி மற்றும் செப்டம்பர்-அக்டோபர் தனித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.
Friday, August 17, 2012
ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment