போனில் பேசும் போது, வேறொரு இடத்தில் உள்ள ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி திட்டினாலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்' என, உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரைக் கூறி திட்டியதாக, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த சட்டத்தின்படி, அதிக பட்சம், ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த நபர்மேல்முறையீடு செய்தார். 'பொது இடத்தில் ஒருவரை ஜாதியின் பெயரைக் கூறி திட்டினால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். தொலை பேசியில் பேசியது, இரு நபர்களுக்குஇடையேயான உரையாடல்; அது பொது இடமாகாது' என, அந்த நபர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்காத, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. 'தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரில் திட்டினாலும், அது குற்றமாகும்' என, அமர்வு கூறியுள்ளது.
No comments:
Post a Comment