தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79 லட்சத்து 69 ஆயிரமாக உள்ளதாக தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பகப் பதிவுதாரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளளன. அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 22 லட்சத்து 35 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, 18 முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 11 ஆயிரம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். 24 முதல் 35 வரையுள்ள 30 லட்சத்து 59 ஆயிரம் பேரும் 35 வயது முதல் 56 வயது வரை 11 லட்சத்து 57 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment