பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் திங்கள்கிழமை (நவ.13) பிற்பகல் முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் திங்கள்கிழமை (நவ.13) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க...: விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Application for Retotalling/ Revalution என்ற தலைப்பை இப்ண்ஸ்ரீந் செய்து வெற்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து இருநகல்கள் எடுத்து புதன்கிழமை (நவ.15) காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை (நவ.17) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்விஅலுவலர்அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார் வசுந்தராதேவி.
No comments:
Post a Comment