தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக 100 மையங்களை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அரசு தரப்பில் கேட்டுக்ெகாள்ளப்பட்டது. இதற்காக, தமிழக அரசு தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 73 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக பதிவு செய்தனர்.
அதன்படி முதற்கட்டமாக 25 மையங்களில் இணையதளத்துடன் கூடிய கணினிகள் பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்தபடியே இணையதளம் வழியாக புரஜெக்டர் திரை மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. சென்னையில் எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது.
No comments:
Post a Comment