மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஆன்லைன் பதிவுக்கு வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். மெடிக்கல், சர்ஜிக்கல், டென்டல் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் நடத்துகின்ற நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். எம்.டி, எம்.எஸ், பிஜி டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.3750. ரூபே கார்டு, நெட் பாங்கிங் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு 2750 ரூபாய் ஆகும். ஆன்லைன் தேர்வு ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெறும்.
முடிவுகள் ஜனவரி 31ம் தேதி வெளியிடப்படும்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் உட்படுத்தப்படும். புதுடெல்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்ஆர்,புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்கான்ஸ், திருவனந்தபுரம் சித்ரா ஆகிய 5 நிறுவனங்களுக்கு சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறாது.
திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு, மங்களூரு, கோயம்புத்தூர், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்கள் உட்பட 128 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது தேர்வு மையத்தை தேர்வு செய்யலாம். எம்டிஎஸ் பட்ட மேற்படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு வழியாக சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம், கோழிக்கோடு உட்பட 29 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதுடெல்லி எய்ம்சில் இந்த தேர்வு வழியாக சேர்க்கை நடைபெறாது. மேலும் விபரங்களை ஷ்ஷ்ஷ்.ஸீதீமீ.மீபீu.வீஸீ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment