இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 27, 2017

இன்றைய தினமணியில் என் வரிகள் நன்றி:தினமணி

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை


வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.

இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு


தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்தி: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரி 29 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கால அட்டவணை: 29-1-2018 தமிழ், 30-1-2018 ஆங்கிலம், 31-1-2018 கணிதம், 1-2-2018 அறிவியல், 2-2-2018 சமூக அறிவியல்.

பள்ளிகளில் புகார் பெட்டி


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன.

அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை. உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு


நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நவ., 20ல் வெளியிட்டார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், tnscert.org என்ற இணையதளத்தில், நவ., 21ல், பாடத்திட்ட வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், ஒரு வாரம் வரை கருத்து கூறலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை முடியும் நிலையில், கருத்து கூறுவதற்கு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி, நமது நாளிதழில், நேற்று வெளியானது.

இது தொடர்பாக, அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின், பாடத்திட்டத்துக்கான கருத்து கூற, இன்று முதல், ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்படும் என, அறிவித்தார். இதன்படி, டிச., 4 வரை, பாடத்திட்ட கருத்துக்களை பெற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு


2015-2016-ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 195 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற 25kg,20kg குத்துச்சண்டை போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மாணவிகள் மிருதிபாஷினி,சரண்யா வுக்கு வாழ்த்துகள் -ஊ.ஒ.து.பள்ளி,பூலுவபட்டி, திருப்பூர் வடக்கு

195 பணிநாடுநர்களுக்கு பணி உத்தரவு

Sunday, November 26, 2017

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை என்றும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு, அரசு ஊழியர், - ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கூட்டமைப்பு, செப்டம்பரில் நடத்திய, தொடர் வேலை நிறுத்த போராட்டம், உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. அப்போது, நவ., 30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து, நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 'குறித்த நாட்களுக்குள் நிபுணர் குழு அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:

உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தபடி, நிபுணர் குழுவின் அறிக்கை, நவ., 30ல் வெளியிடப்பட வேண்டும். அதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். அறிக்கை வராவிட்டால், டிச., 4ல், உயர்மட்டக்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இது குறித்த வழக்கு, டிச., 8ல் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தமிழக அரசு தாமதிக்காமல், கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

புதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு


புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க, பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 14 ஆண்டுகள்; 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளுக்குப்பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

இதற்காக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, துறை செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி ஒருங்கிணைப்பில், புதிய பாடத்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை, நவ., 20ல், முதல்வர் பழனிசாமியால் வெளியிடப்பட்டது. நவ., 21ல், tnscert.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில், பாடத்திட்ட நோக்கம், தயாரித்த முறை, பாடங்களின் வகைகள், பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் போன்றவை, தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் கருத்துகளை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம், நாளை முடிகிறது. அதே நேரம், பாடத்திட்டம் குறித்து கருத்து கூற, இன்னும் ஒரு வாரம் வரை கூடுதல் அவகாசம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.

Saturday, November 25, 2017

பந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்


ஊதிய உயர்வு இன்றி, பகுதி நேர ஆசிரியர்கள் பந்தாடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், 110வது விதியில் அறிவிக்கப்பட்டு, 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதந் தோறும், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் பழனிசாமிக்கு மனு அளித்துள்ளார். அதில், 'ஆண்டுதோறும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மே மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுவரை, 38 ஆயிரம் ரூபாய் வர வேண்டியுள்ளது;

அதை, வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் உயர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், 'ஆசிரியர்கள், ஸ்டிரைக் நேரத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து, நிலைமையை சமாளிக்கின்றனர். 'ஆனாலும், பகுதி நேர ஆசிரியர்களை அரசு கண்டு கொள்ளாததால், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில், கலை ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். இதனால், பகுதி நேர ஆசிரியர்களை பல சங்கத்தினரும், அரசும் பந்தாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.-

Friday, November 24, 2017

5000 அரசுப்பள்ளிகளை இணைக்கத் திட்டம்

ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்ட செய்தி


உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு


உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்தும், 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்தும் என்.பி.பி.ஏ., அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சிவில் சர்வீஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் வகையில், மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். டிச., இறுதிக்குள், 100 மையங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம். போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் சேர, 'ஆன்லைனில்' விண்ணப்பித்த, 73 ஆயிரம் பேருக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும். 3,000 பள்ளிகளில், தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்'அமைக்கப்படவுள்ளது.

தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய்; 12ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளில் அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான, 'ஹெல்ப் லைன்' என்ற புதிய திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. அறிவியல் துறையில் பயனடையும் வகையில், 100 மாணவர்களை தேர்வு செய்து, 15 நாள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்

அஞ்சலக கணக்கு ஆதார் கட்டாயம்


அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு: மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைநிறுத்தம்

டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை திருத்தம் செய்யக் கோரி அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இரு சங்கங்களின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ஐடிபிஐ வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து, கடந்த 1.11.2012 இல் இருந்து ஐடிபிஐ நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் வங்கியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்து 25 சதவீதமாக இருக்கிறது. அதேபோல வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்கான ஒதுக்கீடு செய்த தொகையும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

திருப்பூர் ஜாக்டோ ஜியோ


Wednesday, November 22, 2017

தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு இல்லை: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

2017-2018ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு‌ மாணவர்களுக்கும் மாநில அளவில் ‌அரசுப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகமதிப்பீட்டிற்கான 10 மதிப்பெண்களை வழங்கும் முறை பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேல்நிலைத் தேர்வெழுதும் நேரடி தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக தனித் தேர்வர்கள், 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைய தனித் தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் எழுத்துத் தேர்வில் 100‌ மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி நேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது.

மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்