ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்காக அக்.25 முதல் அக்.27-ஆம் தேதிவரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை (அக்.13) வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிகழாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற 18,769 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த கடந்த ஜூலையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள இயலாத 701 பேர் மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான பி.எட். கல்வியியல் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட். சான்று அளிக்காத 535 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், மதுரையில்... இத்தகையோர் விழுப்புரம் மற்றும் மதுரையில் அக். 25 முதல் அக். 27 வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம். இதற்கான அழைப்புக் கடிதங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனியாக அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தையே எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்- 605 602 மற்றும் நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை, மதுரை-625 009.
No comments:
Post a Comment