இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 25, 2017

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை; மத்திய அரசு அறிமுகம்


தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 6–ந்தேதி உத்தரவு வெளியிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை தொலை தொடர்புத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்களை (ஓ.டி.பி.) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ். என்ற குரல் மறுமொழி கலந்துரையாடல் முறை மூலமாகவும் பதிவு செய்ய முடியும். இந்த எளிய முறை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.

மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு அவதிப்படுவோருக்கு வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று மறு சரிப்பார்ப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொலை தொடர்புத்துறை பரிந்துரை செய்துள்ளது. தொலைபேசி நிறுவனங்களின் முகவர்கள், வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரியை மட்டுமே பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கட்டளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படாது.

வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் செல்போன் சேவையை பெற்று இருந்தாலும் தங்கள் செல்போன் எண்களை நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சரிபார்க்கவோ, மறு சரிபார்க்கவோ இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment