தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் 35414, நடுநிலைப் பள்ளிகள் 9708, உயர் நிலைப் பள்ளிகள் 5705, மேனிலைப் பள்ளிகள் 7206 இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு அடையாள அட்டை போன்ற மாணவர்கள் முழு விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் அறிவித்தார்.
இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாணவர்களின் தகவல்களை திரட்டும் பணி தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நேற்று ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. தற்போது அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் கார்டு அச்சிடும் இயந்திரம் வாங்கியதும் அச்சிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்குவார்கள். அதில் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் ஸ்மார்ட் கார்டுகள் பெறுவார்கள்.
No comments:
Post a Comment