தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.
இவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.
No comments:
Post a Comment