மேலை நாடுகளின் கல்வி முறையை கற்றுக்கொள்ளும் வகையில் 100 தமிழக மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மத்திய அரசின் எத்தகைய தேர்வாக இருந்தாலும் அதைத் நம் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 412 பயிற்சி மையங்களை வரும் நவம்பருக்குள் அமைக்க உள்ளோம். இந்த மையங்களில் பணிபுரிய சிறப்பு பயிற்சி பெற 54 ஆசிரியர்களை ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். அவர்கள் தமிழகம் திரும்பியவுடன் 3000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க, அவர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர்.
இந்த சிறப்புப் பயிற்சியில் மாணவர்கள் சேர ஒன்றியத்துக்கு ஒரு விண்ணப்பம் வழங்கி பின்னர் அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும். கரூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் என்சிசி அமைப்புகள் இல்லையெனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் என்சிசி அமைப்புகள் கொண்டு வரப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஒரிரு நாட்களில் குழு அமைக்கப்படும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கைக்கேற்ப 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பாதிக்கப்பட்டோர் குறித்து தமிழக அரசு கவனத்தில் கொள்ளும். நவம்பர் மாதத்திற்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும்.
இனி பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்போதே மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் 920 பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.
No comments:
Post a Comment