தேசிய திறனாய்வுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், வரும் 30-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் வரும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவில் இத்தேர்வு வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆயிரம் பேருக்கு ஆராய்ச்சிப் படிப்பு வரை மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இத்தேர்வு எழுத விண்ணப்பித்தோர், அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகி, இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment