தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும்.
தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. எனவே, உபரியாக, இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது.
இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment