இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 24, 2017

பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி


பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 50 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும். இதற்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்டணத்தை 50 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வழக்கமாக பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் 2 ரூபாய் தாமதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் ரூ.100 ஆக, அதாவது 50 மடங்காக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வசூலிக்கப்பட்டு வந்த தாமதக்கட்டணம் ரூ.5, தற்போது ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல், பதிவு செய்யப்பட்டால் அதற்கு ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தவிர, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5க்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் நகலைப் பெற இனி ரூ.200 செலுத்த வேண்டும். இதுவரை கூடுதல் நகல் பெற கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஒவ்வொரு நகலுக்கும் ரூ.200 கொடுக்க வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லை என்ற தகவலை பெற இதுவரை ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு பதிவாளர் நியமனம்: தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரகப்பகுதிகளில் உள்ள மாவட்ட அரசு தலைமையக ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், தாலுகா அல்லது தாலுகா நிலை அல்லாத ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றுக்கு பல்நோக்கு சுகாதார கண்காணிப்பாளர்களை (ஆண்கள், முன்னாள் சுகாதார இன்ஸ்பெக்டர்) பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள சுகாதார இன்ஸ்பெக்டர் அல்லது செயல் அதிகாரிகளை அங்குள்ள மாவட்ட அரசு தலைமையக ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், தாலுகா அல்லது தாலுகா நிலை அல்லாத ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment